அதிகாரிகள் மடக்கியபோது மண் லாரியுடன் தப்பிசென்ற டிரைவர்
பனப்பாக்கத்தில் அதிகாரிகள் மடக்கியபோது மண் லாரியுடன் டிரைவர் தப்பிசென்றார்.
ராணிப்பேட்டை
பனப்பாக்கம் அண்ணா நகர் பகுதியில் நேற்று வருவாய்த் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மண் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை நிறுத்தி பனப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி டிரைவரிடம் விசாரணை செய்துகொண்டிருந்தார். இந்த சம்பவம் குறித்து பனப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் மூலம் நெமிலி தாசில்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தாசில்தார் வருவதை எதிர்பார்த்து கொண்டிருந்த சமயத்தில் டிரைவர் மண் லாரியுடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் நெமிலி போலீசில் புகார் செய்தார்.
Related Tags :
Next Story