பூட்டிய வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய டிரைவர்

கோவை அருகே பூட்டிய வீட்டில் தூக்கில் டிரைவர் பிணமாக தொங்கினார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை
கோவை அருகே பூட்டிய வீட்டில் தூக்கில் டிரைவர் பிணமாக தொங்கினார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பூட்டிய வீட்டில் டிரைவர் பிணம்
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 45). டிரைவர். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கோவை வந்தார். பின்னர் கோவை அருகே உள்ள ஈச்சனாரி கணேசபுரத்தில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் ராஜ்குமார் அறை கடந்த 2 நாட்களாக திறக்கப்படாமல் உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. மேலும் அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த வீட்டு உரிமையாளர், ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். அப்போது ராஜ்குமார் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
கடிதம் சிக்கியது
இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டு உரிமையாளர் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ராஜ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராஜ்குமார் தங்கியிருந்த அறையை சோதனை செய்த போது அங்கு ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில் திருமண தகவல் இணைதளத்தின் மூலம் விவாகரத்தான ஒரு பெண் எனக்கு அறிமுகமானார். அவரை காதலித்து வந்தேன். ஆனால் அந்த பெண் என்னை திருமணம் செய்து மறுத்துவிட்டதால் தற்கொலை செய்கிறேன் என எழுதியிருந்தார். இந்த கடிதத்தை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






