செல்போன் பேசியவாறு அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் பணியிடை நீக்கம்
செல்போன் பேசியவாறு அரசு பஸ்சை இயக்கிய டிரைவரை பணியிடை நீக்கம் செய்து கும்பகோணம் கோட்ட போக்குவரத்து அதிகாரி உத்தரவிட்டு உள்ளார். .
செல்போன் பேசியவாறு அரசு பஸ்சை இயக்கிய டிரைவரை பணியிடை நீக்கம் செய்து கும்பகோணம் கோட்ட போக்குவரத்து அதிகாரி உத்தரவிட்டு உள்ளார். .
அரசு பஸ்
ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை வழித்தடத்தில் நேற்று முன்தினம் காலை 8.50 மணிக்கு அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. இந்த அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் மோகன் ஒரு கையில் செல்போன் பயன்படுத்தி பேசியவாறு ஒரு கையில் பேருந்தை ஓட்டிச்சென்றார்.
இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படம் வெளியானது. இதையடுத்து டிரைவர் பணியின்போது செல்போன் பயன்படுத்தி பஸ்சை இயக்கிய குற்றத்திற்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
டிரைவர் பணியிடை நீக்கம்
இதையடுத்து கும்பகோணம் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் உத்தரவின் பேரில் டிரைவர் மோகனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் (காரைக்குடி) சிங்காரவேல் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இதேபோல் யாரேனும் செல்போன் பயன்படுத்தி பஸ் இயக்குவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கும்பகோணம் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.