ஓடும் டிராக்டரில் இருந்து குதித்த டிரைவர் பலி


ஓடும் டிராக்டரில் இருந்து குதித்த டிரைவர் பலி
x

நெல்லை அருகே ஓடும் டிராக்டரில் இருந்து குதித்த டிரைவர் பலியானார்.

திருநெல்வேலி

நெல்லை:

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே அருணாபேரியைச் சேர்ந்தவர் அந்தோணி (வயது 45). டிரைவரான இவர் நேற்று நெல்லை அருகே தாழையூத்து பகுதியில் டிராக்டர் ஓட்டிச் சென்றார். அப்போது டிராக்டரின் டயர் திடீரென வெடித்ததால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது.

அப்போது டிராக்டரில் இருந்து கீழே குதித்த அந்தோணி பலத்த காயமடைந்தார். உடனே அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அந்தோணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story