வேனுக்கு தீ வைத்த டிரைவர் கைது
சுல்தான்பேட்டை அருகே வேனுக்கு தீ வைத்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.
கோயம்புத்தூர்
சுல்தான்பேட்டை ஒன்றியம் கரையாம்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 34). சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு இவரது வீட்டில் அருகே வசித்து வரும் மணி என்கிற செல்வராஜ் என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் விமல்ராஜ் (28). தகாத வார்த்தையால் திட்டிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, பிரகாஷ் அருகில் பெண்கள் வசிப்பதால் தகாத வார்த்தை பேச வேண்டாம் என கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த விமல்ராஜ், பிரகாசுக்கு சொந்தமான வேன் பெட்ரோல் டேங்கில் தீ வைத்து உள்ளார். வேன் தீப்பிடித்து எரிவதைக் கண்ட பிரகாஷ் தீயை விரைவாக அணைத்து பரவாமல் தடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விமல்ராஜை கைது செய்தனர்.
Related Tags :
Next Story