டிரோன் பறந்ததால் பரபரப்பு


டிரோன் பறந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 6 July 2023 12:24 AM IST (Updated: 6 July 2023 12:23 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மத்திய சிறை அருகே டிரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்

கடலூர் முதுநகர்,

கடலூர் அருகே உள்ள கேப்பர் மலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இதன் அருகில் கடலூர் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை வட்டார போக்குவரத்து அலுவலக பகுதியில் திடீரென டிரோன் ஒன்று பறந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த தகவலின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். ஆனால் அங்கு டிரோனை காணவில்லை. அதனை இயக்கியவர்கள் அங்கிருந்து டிரோனுடன் சென்றதாக தெரிகிறது. தொடர்ந்து டிரோனை இயக்கியது யார்?, எதற்காக ?. இயக்கினார்கள் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறைச்சாலையை வீடியோ எடுக்க...

டிரோன் பறந்த பகுதியில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் தான் கடலூர் மத்திய சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையை வீடியோ எடுப்பதற்காக டிரோன் பறக்கவிடப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் டிரோன் பறந்தது தொடர்பாக தங்களுக்கு ஏதும் தெரியாது என்றனர். பாதுகாப்பு அதிகமுள்ள கடலூர் மத்திய சிறைச்சாலை அருகில் திடீரென டிரோன் பறந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story