கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி: கடைகளில் அதிகளவில் ஆட்களை அனுமதிக்ககூடாது-சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்


கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி:  கடைகளில் அதிகளவில் ஆட்களை அனுமதிக்ககூடாது-சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்
x

கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி காரணமாக கடைகளில் அதிகளவில் ஆட்களை அனுமதிக்ககூடாது என்று சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் வாரப்பட்டி, கள்ளப்பாளையம், வதம்பச்சேரி, பூராண்டாம்பாளையம், ஜல்லிபட்டி, செஞ்சேரிப்புத்தூர் உள்பட மொத்தம் 20 ஊராட்சிகள் உள்ளன. சுமார் ஒரு லட்சம் பேர் வசித்து வருகின்றனர். கடந்த 3 மாதமாக கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் தற்போது, ஒன்றியத்தில் ஆங்காங்கே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனையடுத்து, வட்டார சுகாதார துறையினர், உள்ளாட்சி துறையினர் பொதுமக்கள் அதிகம் கூடும், நடமாட்டம் உள்ள இடங்களில் கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், வீட்டை விட்டு வெளியில் வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். வரிசையில் நின்று பொருட்கள் வாங்க வேண்டும். வரிசையில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். கடை ஊழியர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். பஸ்சில் பயணிக்கும்போது 2 முகக்கவசம் அணியவேண்டும். அலுவலக பணியாளர்கள் முகக்கவசம் அணிந்து பணியாற்றவேண்டும். கடைகளில் கை சுத்திகரிப்பான், வெப்பநிலை பரிசோதனை கருவிகள் கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும். கடைகளுக்குள் அதிகப்படியான ஆட்களை அனுமதிக்க கூடாது. நோய்த்தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக ஆஸ்பத்திக்கு செல்ல வேண்டும் என்றனர்.


Next Story