தலைமையாசிரியர் வீட்டின் கதவை உடைத்து திருட்டு


தலைமையாசிரியர் வீட்டின் கதவை உடைத்து திருட்டு
x

தலைமையாசிரியர் வீட்டின் கதவை உடைத்து திருட்டு நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள நரசிங்கபாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சம்பத்(வயது 54). இவர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஜெயங்கொண்டம் பகுதியிலேயே தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தனது கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் வேலை நடப்பதை பார்வையிட சென்றுள்ளார். இந்த நிலையில் சம்பத்தின் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த லெட்சுமி குத்து விளக்கு ஒன்றும், லெட்சுமி விளக்கு பெரியது இரண்டும், லட்சுமி விளக்கு சிறியது ஒன்றும், குங்குமச்சிமிழ் ஒன்றும் திருடுபோய் இருந்தது தெரிய வந்தது. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.11,500 திருடுபோய் இருந்தது. இதுகுறித்து தலைமையாசிரியர் சம்பத் கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story