தீக்காயம் அடைந்த முதியவர் சாவு


தீக்காயம் அடைந்த முதியவர் சாவு
x

நெல்லை அருகே சீவலப்போியில் தீக்காயம் அடைந்த முதியவர் இறந்தார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள சீவலப்பேரியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 85). மன நலம் பாதிக்கப்பட்டவர். இதற்காக அவர் கடந்த ஒரு ஆண்டாக சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 7- ந்தேதி வீட்டில் பீடி குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த பீடியை அணைக்காமல் மெத்தையிலேயே போட்டதாக குறிப்பிடுகிறது. இதில் தீக்காயம் அடைந்த சுந்தரத்துக்கு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story