யானை தாக்கியதில் பெண் படுகாயம்


யானை தாக்கியதில் பெண் படுகாயம்
x

பஞ்சப்பள்ளி அருகே யானை தாக்கியதில் பெண் படுகாயம் அடைந்தார்.

தர்மபுரி

பாலக்கோடு

பஞ்சப்பள்ளி அருகே யானை தாக்கியதில் பெண் படுகாயம் அடைந்தார்.

யானை தாக்கியது

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே புல்வெளி கிராமத்தில் நேற்று அதிகாலை 2 காட்டு யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து சுற்றித்திரிந்தன. பின்னர் அந்த யானைகள் ஜெய்சங்கர் என்பவரின் விவசாய நிலத்தில் உள்ள தானியங்களை சாப்பிட வந்தது.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஜெய்சங்கரின் மனைவி வசந்த்ரா (வயது 45) யானையை விரட்டி உள்ளார். அந்த நேரத்தில் ஒரு யானை இவரை தாக்கி விட்டு சென்றது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு சென்றனர்.

படுகாயம்

பின்னர் வசந்த்ரா மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து பஞ்சப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் பாலக்கோடு வனத்துறையினர் யானைகளை மீண்டும் காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தனர். மீண்டும் யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருவது கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story