நெற்பயிரை சேதப்படுத்திய யானை
அனவன்குடியிருப்பு பகுதியில் தோட்டத்தில் புகுந்து நெற்பயிரை யானை சேதப்படுத்தியது.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கரமசிங்கபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அனவன் குடியிருப்பு கிராமம் உள்ளது. இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் வாழை, கரும்பு மற்றும் தென்னை போன்றவற்றை பயிரிட்டு வருகின்றனர். இந்த நிலையில் டானா பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் மாவடிவிளை பகுதியில் சுமார் 2½ ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிட்டு உள்ளார். அந்த ேதாட்டத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானை நெற்பயிர் வழியாக நடந்து சென்று அங்குள்ள பனை மரத்தை பிடுங்க முயற்சி செய்தது. இதில் நெற்பயிர்கள் சேதம் அடைந்தன. மேலும் அப்பகுதியில் டேனி சேவியர் (வயது 23) என்பவரின் தோட்டத்தில் புகுந்த மிளாக்கள், அங்கு பயிரிடப்பட்டு உள்ள நெற்பயிரை மேய்ந்து சேதப்படுத்தி உள்ளன.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து கீழே இறங்குவதை தடுக்க வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.