பிளீச்சிங் பவுடர் சாப்பிட்டு உடல் மெலிந்த சிறுமி குணமடைந்தார்- சிறுமியை வீட்டிற்கு சென்று கவனித்த சுகாதாரத்துறை அமைச்சர்
செங்கோட்டையில் பிளீச்சிங் பவுடர் சாப்பிட்டு குணமடைந்த சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் நலம் விசாரித்தார்.
செங்கோட்டை.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த 6 வயது சிறுமி இசக்கியம்மாள். கடந்த ஆண்டில் தவறுதலாக பிளீச்சிங் பவுடர் உட்கொண்டதால் உடல் மெலிந்து மிகவும் பாதிப்படைந்து காணப்பட்டார்.
இந்த சிறுமியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சென்னைக்கு அழைத்து சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். தீவிர சிகிச்சைக்கு பின்னர் சிறுமி இசக்கியம்மாள் குணம் அடைந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.
இந்த நிலையில் இன்று தென்காசி மாவட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் செங்கோட்டையில் உள்ள சிறுமி இசக்கியம்மாள் வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது, சிறுமி இசக்கியம்மாள் ஒடி வந்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் மடியில் அமர்ந்து பேசியது அனைவர் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story