ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்க வேண்டும்


ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்க வேண்டும்
x

ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்க வேண்டும் என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்க வேண்டும் என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.

சாமி தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவில்களை விட்டு இந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும். இந்துக்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும்.

தமிழகத்தில் பயங்கரவாதிகள் அதிகம் ஒளிந்துள்ளனர். இங்கு கலவரத்தை தூண்ட சிலர் முயற்சி செய்கின்றனர். தீட்சிதர்களை மிரட்டுவது தவறானது. இது கண்டிக்கத்தக்கது. தேர் ஓடும் பகுதிகளில் முன்கூட்டியே ஆய்வு நடத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்த வேண்டும்.

நிலங்களை மீட்க வேண்டும்

கோவில்களுக்கு சொந்தமான பல லட்சம் ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. எனவே அனைத்து கோவில் நிலங்களையும் மீட்க வேண்டும். கோவில்களை இடித்தது மட்டும்தான் தமிழக அரசின் ஓராண்டு சாதனையாக உள்ளது.

திருமாவளவன் இந்து பெண்களை தொடர்ந்து விமர்சிப்பது கண்டனத்துக்குரியது. இந்த அரசாங்கம் காணாமல் போவதற்கு அவர் ஒரு காரணமாக இருப்பார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் மாலையில் வடக்குரத வீதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும், காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசினார்.


1 More update

Next Story