எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு ரெயில் மானாமதுரையில் நின்று சென்றது


எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு ரெயில் மானாமதுரையில் நின்று சென்றது
x

தமிழரசி எம்.எல்.ஏ. கோரிக்கையை ஏற்று எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு ரெயில் மானாமதுரையில் நின்று சென்றது

சிவகங்கை

மானாமதுரை,

கடந்த 4-ந்தேதி முதல் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில் மானாமதுரை வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு கொல்லம், புனலூர், செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி வழியாக திருவாரூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி செல்கிறது. இதையடுத்து இந்த ரெயில் முக்கிய ஜங்சன் அந்தஸ்து பெற்ற மானாமதுரை ரெயில் நிலையத்தில் நிற்காமல் சென்றது. இதுகுறித்து மானாமதுரை பகுதி பொதுமக்கள் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசிக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தமிழரசி எம்.எல்.ஏ. தென்னக ரெயில்வே பொதுமேலாளருக்கு மானாமதுரையில் இந்த ரெயில் நின்று செல்ல கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்ற பின்னர் தற்போது எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு ரெயில் மானாமதுரை ரெயில் நிலையத்தில் நின்று செல்கிறது. இதையடுத்து மானாமதுரை தொகுதி மக்கள் தமிழரசி, எம்.எல்.ஏ.க்கு நன்றி தெரிவித்தனர். இந்த ரெயில் வருகிற ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி வரை மட்டும் இயங்கும்.


Related Tags :
Next Story