கொழுமம் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி
கொழுமம் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சத்திற்கான காசோைலயை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் வழங்கினார்கள்.
திருப்பூர்
போடிப்பட்டி
கொழுமம் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சத்திற்கான காசோைலயை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் வழங்கினார்கள்.
நிதியுதவி
மடத்துக்குளத்தையடுத்த கொழுமத்தில் உள்ள சமுதாயநலக்கூடம் மேற்கூரை உடைந்து விழுந்த விபத்தில் முரளிராஜா, கவுதம் மணிகண்டன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தலா ரூ. 2 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர்.
Related Tags :
Next Story