பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு..! 23 காளைகளை அடக்கி மதுரை சின்னப்பட்டி தமிழரசன் முதலிடம்


தினத்தந்தி 16 Jan 2023 7:52 AM IST (Updated: 16 Jan 2023 5:15 PM IST)
t-max-icont-min-icon

புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.


மதுரை,

உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி மாட்டுப்பொங்கல் இன்று மஞ்சள் மலை ஆற்று மைதான திடலில் உறுதி மொழி எடுத்து தொடங்கியது. போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

ஜல்லிக்கட்டில் 335 மாடுபிடி வீரர்கள் மற்றும் 750 முதல் ஆயிரம் காளைகள் வரை வாடிவாசலில் அவிழ்த்து விடப்படுகிறது. முதலில் கிராம கோவில்களுக்கு சொந்தமான காளைகள் அவிழ்த்து விடப்படுகிறது. காளைகளை அடக்க வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். முதல் சுற்றில் மஞ்சள் நிற பனியன் அணிந்து மாடுபிடி வீரர்கள் களத்தில் உள்ளனர்.

சிறந்த மாடுபிடி வீரருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் பரிசாக இரு சக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்படுகிறது. மேலும் தங்கம், வெள்ளி, நாணயங்கள், அண்டா முதல் சைக்கிள், பீரோ, பிரிட்ஜ், டிவி, உள்ளிட்ட அனைத்து வீட்டு உபயோக பொருட்களும், பல்வேறு உயர்ந்த பரிசுகளும் இந்த ஆண்டும் வழங்கப்படுகிறது.

Live Updates


Next Story