புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது...!
புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது.
மதுரை,
உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு விழா இன்று (திங்கட்கிழமை) மாட்டுப்பொங்கல் அன்று மஞ்சள் மலை ஆற்று மைதான திடலில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று தயார் நிலையில் உள்ளது.
சிறந்த மாடுபிடி வீரருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் பரிசாக இரு சக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்படுகிறது. மேலும் தங்கம், வெள்ளி, நாணயங்கள், அண்டா முதல் சைக்கிள், பீரோ, பிரிட்ஜ், டிவி, உள்ளிட்ட அனைத்து வீட்டு உபயோக பொருட்களும், பல்வேறு உயர்ந்த பரிசுகளும் இந்த ஆண்டும் வழங்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டில் 335 மாடுபிடி வீரர்கள் மற்றும் 750 முதல் ஆயிரம் காளைகள் வரை வாடிவாசலில் அவிழ்த்து விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில், காளைகளுக்கான ரத்த மற்றும் சிறுநீர் பரிசோதனை தொடங்கியது.