விஷம் குடித்து விவசாயி சாவு


விஷம் குடித்து விவசாயி சாவு
x

விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

காரியாபட்டி,

திருச்சுழி அருகே உள்ள கல்லுமடம் கிராமத்தை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 44). விவசாயியான இவருக்கு இதய நோய் இருந்து வந்ததாகவும், அதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே மணிமாறனை அவரது மனைவி ஜெயலட்சுமி மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து எம். ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Related Tags :
Next Story