வாய்க்காலில் தவறி விழுந்து விவசாயி சாவு
வாய்க்காலில் தவறி விழுந்து விவசாயி சாவு
வீ மேட்டுப்பாளையம்
வீ மேட்டுப்பாளையத்தில் எல்பி பி கிளை வாய்க்காலில் தவறி விழுந்த விவசாயி சாவு வீரசோழபுரம் யூனியன் வாலிபனங்காடு, கிலுவங்காடு பகுதியில் வசிப்பவர் பொன்னுசாமி மகன் ராமசாமி 60 விவகாயி இவருக்கு திருமணமாகி பேபி என்ற மனைவியும் சிவக்குமார் 32 என்ற மகனும் உள்ளனர் ராமசாமி வீ மேட்டுப்பாளையம் பகுதியில் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார் நேற்று முன்தினம் இரவு ர்தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக எல்பிபி கிளை வாய்க்கால் மதகிற்கு சென்றபோது தவறி விழுந்துவிட்டதாக தெரிகிறது நேற்று காலையில் பூமாண்டன் வலவு ரோட்டில் உள்ள எல்பி பி கிளை வாய்க்காலில் இறந்த நிலையில் ராமசாமி உடல் கிடப்பதாக மனைவி பேபி கொடுத்த புகாரின்பேரில் வெள்ளகோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜமூர்த்தி வழக்குப்பதிவு செய்துபிரேதத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக காங்கயம் அரச மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார் ஆய்வாளர் ரமாதேவி விசாரணை செய்து வருகிறார்