அஞ்சுகிராமம் அருகே விபத்தில் விவசாயி பலி


அஞ்சுகிராமம் அருகே விபத்தில் விவசாயி பலி
x

அஞ்சுகிராமம் அருகே விபத்தில் விவசாயி பலியானார்.

கன்னியாகுமரி

அஞ்சுகிராமம்,

அஞ்சுகிராமம் அருகே விபத்தில் விவசாயி பலியானார்.

விபத்து

அஞ்சுகிராமத்தை அடுத்த வாரியூரை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 65). விவசாயியான இவர் நேற்று காலையில் கிருஷ்ணன்புதூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது சாலையில் திரும்ப முயன்றுள்ளார்.

அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த தங்கராஜ் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுதொடர்பாக அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story