பஸ்சில் விவசாயி தவறவிட்ட ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.30 ஆயிரம் எடுத்த மர்மநபர்


பஸ்சில் விவசாயி தவறவிட்ட ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.30 ஆயிரம் எடுத்த மர்மநபர்
x

பஸ்சில் விவசாயி தவறவிட்ட ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.30 ஆயிரத்தை மர்மநபர் எடுத்துச்சென்றார்.

திருச்சி

சமயபுரம்:

லால்குடி அருகே உள்ள கல்லக்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் மருதை (வயது 65). விவசாயியான இவரும், இவரது மனைவி சுசி என்பவரும் நேற்று முன்தினம் சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்வதற்காக கல்லக்குடியில் இருந்து ஒரு தனியார் பஸ்சில் சமயபுரம் வந்தனர். புறத்தாக்குடியில் உள்ள தனது உறவினர்களை அழைத்துக்கொண்டு செல்வதற்காக புறத்தாக்குடி பஸ் நிறுத்தத்தில் அவர்கள் இறங்கினர். அப்போது மருதையின் சட்டைப் பையில் இருந்த பாக்கெட் டைரிைய காணவில்லை. அதில் ஏ.டி.எம். கார்டு, ஆதார் கார்டு, பான் கார்டு போன்றவை இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் டைரியில் ஏ.டி.எம். கார்டின் ரகசிய குறியீட்டு எண்ணை எழுதி வைத்திருந்ததாக தெரிகிறது. இதனால் கார்டு காணாமல் போன சில நிமிடங்களிலேயே, அவரது வங்கி கணக்கில் இருந்து சமயபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள ஒரு ஏ.டி.எம். எந்திரத்தில் சில நிமிடங்கள் இடைவெளியில் ரூ.30 ஆயிரம் எடுத்திருப்பதாக மருதையின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து சமயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story