விவசாயி வெட்டிக்கொலை
விவசாயி வெட்டிக்கொலை
நீடாமங்கலம்
நீடாமங்கலம் அருகே விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயி வெட்டிக்கொலை
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே வையகளத்தூர் கிராமம் தெற்குத்தெருைவ சேர்ந்தவர் ஜெய்சங்கர்(வயது 28). விவசாயி. அதே தெருவைச்சேர்ந்தவர் மணிகண்டன்(28).
நண்பர்களான இருவரும் நேற்று மதியம் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் அரிவாளால் ஜெய்சங்கரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஜெய்சங்கர் பரிதாபமாக இறந்தார்.
ரேஷன் கார்டு பிரச்சினை
இதுகுறித்து தகவலறிந்த நீடாமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெய்சங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஜெய்சங்கர் தனது வீட்டின் ரேஷன் கார்டை மணிகண்டன் வீட்டில் அடகு வைத்திருந்்ததும், அதனை மணிகண்டன் வீட்டிற்கு சென்று அவரது அம்மாவிடம் ரேஷன் பொருட்கள் வாங்கி விட்டு தருகிறேன் கார்டை கொடுங்கள் என ஜெய்சங்கர் கேட்டதும், இது தொடர்பாக இருவருக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறில் மணிகண்டன், ஜெய்சங்கரை வெட்டிக்கொன்றதும் தெரிய வந்தது.
கொலை செய்யப்பட்ட ஜெய்சங்கருக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். அவர் தற்போது கர்ப்பிணியாக உள்ளார்.