துப்பாக்கி குண்டு பாய்ந்து விவசாயி படுகாயம்
மேல்மலையனூர் அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து விவசாயி படுகாயம் பூனையை சுட்டபோது விபரீதம்
விழுப்புரம்
மேல்மலையனூர் அருகே ஆத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன்(வயது 60) விவசாயியான இவர் நேற்று இரவு வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக அங்குள்ள கிணற்றின் சுற்று சுவர் மீது அமர்ந்திருந்தார். அப்போது மேல்மலையனூர் நரிக்குறவர் குடியிருப்பை சேர்ந்த வைத்தீஸ்வரன் மகன் பாண்டியன்(38) நாட்டு துப்பாக்கியால் பூனையை சுட்டார். இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே செத்துவிட்டது. அதே நேரத்தில் துப்பாக்கி குண்டின் சிதறல்கள் அருகில் இருந்த ஜெயராமனின் நெற்றி, மார்பு, வலது கை உள்ளிட்ட இடங்களில் பட்டது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்த புகாரின் பேரில் அவலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.