விஷ இலையை தின்ற விவசாயி சாவு


விஷ இலையை தின்ற விவசாயி சாவு
x

விபத்தில் மகன் இறந்த துக்கம் தாங்காமல் விஷ இலையை தின்ற விவசாயி பரிதாபமாக இறந்தார்.

புதுக்கோட்டை

மகன் இறந்த துக்கம்

கீரனூர் அருகே ஆழ்வான்பட்டியை சேர்ந்தவர் சங்கிலி (வயது 52). விவசாயி. இவரது மகன் அருண்குமார் (22). இவர், கடந்த மாதம் வேலை தேடி குஜராத் மாநிலத்திற்கு சென்றார். அப்போது அங்கு நடந்த விபத்து ஒன்றில் பலியானார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

மகன் இறந்த துக்கம் தாங்காமல் மனமுடைந்த நிலையில் சங்கிலி இருந்து வந்தார். இந்நிலையில், சங்கிலி விஷ இலையை தின்று வீட்டில் மயங்கி கிடந்தார்.

விவசாயி சாவு

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கிலி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து உடையாளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் இறந்த துக்கம் தாங்காமல் தந்தை விஷ இலையை தின்று இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story