கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி சிகிச்சை பலனின்றி சாவு


கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 7 Jun 2023 12:31 AM IST (Updated: 7 Jun 2023 3:49 PM IST)
t-max-icont-min-icon

கலவையில் தூர்வார சென்றபோது கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள சென்னசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த குப்புசாமியின் மகன் ரவி. கலவை-சென்ன சமுத்திரம் சாலையில் உள்ள சுப்பிரமணி என்பவரது கிணற்றில் கடந்த 23-ந் தேதி காலையில் தூர்வாரும் பணிக்கு சென்றார். அங்கு கிணற்றில் இறங்கியபோது கயிறு அறுந்து கீழே விழுந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ரவியை மீட்டு கலவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ரத்தினகிரி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வீடு திரும்பினார்.

பின்னர் வலி அதிகமானதால் கடந்த 28-ந் தேதி தனியார் மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சை சென்று, அங்கிருந்து வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இது குறித்து கலவை சப்- இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story