திருக்கோவிலூர் அருகேகிணற்றில் பிணமாக மிதந்த விவசாயி :போலீஸ் விசாரணை


திருக்கோவிலூர் அருகேகிணற்றில் பிணமாக மிதந்த விவசாயி :போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 9 Sept 2023 12:15 AM IST (Updated: 9 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே கிணற்றில் பிணமாக விவசாயி மிதந்தாா். இதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி



திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை செட்டியார் தெருவை சேர்ந்தவர் பழனி மகன் சுப்பிரமணி (வயது 42). விவசாயி. கடந்த 4-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் தேடி வந்த நிலையில், அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், நேற்று மணலூர்பேட்டையில் இருந்து ஜம்பை செல்லும் சாலையில் உள்ளஅய்யனார் கோவில் அருகே இருக்கும் கிணற்றில் சுப்பிரமணி பிணமாக மிதந்தார்.

இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, மணலூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கிணற்றில் பிணமாக மிதந்த சுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story