விவசாயிகள் சங்கத்தினர் 'டார்ச்லைட்' அடித்து ஆர்ப்பாட்டம்
நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்க விவசாயிகள் சங்கத்தினர் ‘டார்ச்லைட்’ அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்
வெளிப்பாளையம்:
நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும். மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், நாகை அவுரித்திடலில் நேற்று முன்தினம் இரவு 'டார்ச் லைட்' அடித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் சேவியர் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். விவசாய சங்க மாவட்ட தலைவர் சரபோஜி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story