விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்


விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
x

விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

தஞ்சாவூர்

குருவிக்கரம்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

காத்திருப்பு போராட்டம்

சேதுபாவாசத்திரம் அருகே குருவிக்கரம்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 39 பயனாளிகளுக்கு தமிழக அரசால் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் பயனாளிகளுக்கு இதுவரை நகை திருப்பி வழங்கப்படவில்லை. இதையடுத்து நகைகளை திருப்பி தர வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பல கட்டமாக போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்ததும் தாசில்தார் சுகுமார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் செப்டம்பர் மாதம் 28-ந்தேதிக்குள் பயனாளிகளுக்கு நகை திருப்பி வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

ஆனால் 28-ந்தேதி நகை திருப்பி வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து நேற்று காலை 10 மணிக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் முன்பு 50-க்கும் மேற்பட்ட பயனாளிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு

தகவல் அறிந்ததும் கூட்டுறவுத்துறை துணைப் பதிவாளர் சுகி.சுவாமிநாதன், பேராவூரணி இன்ஸ்பெக்டர் செல்வி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.இதில் 2 நாட்களில் நகைகள் திருப்பி தரப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.


Next Story