பாலம் கட்டப்படாததால் உப்பாற்றில் தண்ணீரில் பிணத்தை தூக்கி செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.


பாலம் கட்டப்படாததால் உப்பாற்றில் தண்ணீரில் பிணத்தை தூக்கி செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
x

The fate of carrying a dead body in salt water

திருச்சி

பாலம் கட்டப்படாததால் உப்பாற்றில் தண்ணீரில் பிணத்தை தூக்கி செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

உப்பாறு

லால்குடி ஒன்றியம், மருதூர் கிராமத்தில் உள்ள நேரு நகரில் 135-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்கள் இறந்துவிட்டால் அவர்களின் உடல்களை அடக்கம் செய்ய உப்பாற்றை கடந்து தான் மயானத்துக்கு செல்ல வேண்டும்.

இதனால் மழைபெய்யும்போது ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால் அப்போது உயிரிழப்பவரின் உடலை கொண்டு செல்ல பெரிதும் சிரமமாக உள்ளது. எனவே உப்பாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் உப்பாற்றில் பாலம் கட்டுவதற்காக அரசு அலுவலர்கள் உப்பாற்றை அளந்து சென்றனர். அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் சுற்றுப்பகுதியை சேர்ந்த மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மார்பளவு தண்ணீரில்...

எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்த ஒருவரின் உடலை அவரது உறவினர்கள் மார்பளவு தண்ணீரில் எடுத்து சென்று அடக்கம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story