சிறுவனை தாக்கி வீட்டுக்குள் சிறை வைத்த தந்தை


சிறுவனை தாக்கி வீட்டுக்குள் சிறை வைத்த தந்தை
x

கொட்டாம்பட்டி அருகே குடும்ப தகராறில் சிறுவனை தாக்கி வீட்டுக்குள் சிறை வைத்த தந்தையை போலீசார் தேடி வருகிறார்கள்.

மதுரை

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி அருகே குடும்ப தகராறில் சிறுவனை தாக்கி வீட்டுக்குள் சிறை வைத்த தந்தையை போலீசார் தேடி வருகிறார்கள்.

சிறை வைப்பு

கொட்டாம்பட்டி அருகே உள்ள சின்னகற்பூரம்பட்டியை சேர்ந்த 36 வயதான கூலி தொழிலாளி. இவருக்கு 26 வயதில் மனைவியும் 9 வயதில் மகனும், 4 வயதில் மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்த பெண் தனது குழந்தைகளை அழைத்து கொண்டு அதே ஊரில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி கூலி தொழிலாளி தனது மகன் படிக்கும் தொடக்கப்பள்ளிக்கு சென்று மகனிடம் பேச வேண்டும் என ஆசிரியையிடம் கூறி விட்டு தனது வீட்டுக்கு அழைத்து சென்று உள்ளார். அப்போது அவர் தனது மகனிடம் தன்னுடன் இருக்க வேண்டும் என கூறியதாக தெரிகிறது. அதற்கு சிறுவன் தான் தாயிடம் இருப்பதாக கூறி இருக்கிறான். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தனது மகன் என்று கூட பாராமல் வீட்டில் இருந்த குத்துவிளக்கால் தாக்கி உள்ளார். இதில் காயம் அடைந்த சிறுவனை வீட்டுக்குள் பூட்டி விட்டு அங்்கிருந்து வெளியே சென்று விட்டார்.

போலீசில் புகார்

இதற்கிடையே தனது மகனை காணாமல் தவித்த அந்த பெண் பல இடங்களில் தேடி பார்த்தார். பின்னர் தனது கணவர் வீட்டுக்கு மகன் சென்று இருக்கலாம் என நினைத்து அங்கு சென்றார். அப்போது கணவரின் பூட்டிய வீட்டில் இருந்து சிறுவனின் அழுகுரல் கேட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் ஓட்டை பிரித்து வீட்டுக்குள் இறங்கி காயம் அடைந்த சிறுவனை மீட்டனர்.

பின்னர் சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளான். .இது தொடர்பாக கொட்டாம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் கமலமுத்து வழக்குப்பதிவு செய்து கூலி தொழிலாளியை தேடி வருகின்றனர். குடும்ப தகராறில் தனது மகனை தந்தை சிறை வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story