கழிவுநீரில் மீன்பிடிக்கும் போராட்டம்
அரக்கோணம் ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிநிற்கும் கழிவுநீரில் மீன்பிடிக்கும் போராட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை
அரக்கோணம் ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றாத ரெயில்வே, நகராட்சி, நெடுஞ்சாலை துறையினரை கண்டித்து அரக்கோணம் ரெயில் பயணிகள் சங்கத்தின் சார்பில் தலைவர் நைனா மாசிலாமணி தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் மீன் பிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ரெயில் பயணிகள் சங்க தலைவர் நைனா மாசிலாமணி கூறுகையில் அரக்கோணம் ரெயில் நிலைய நடை மேடைகளிலிருந்து வரும் கழிவுநீர் மட்டுமின்றி மழை காலங்களில் வரும் மழை நீரும் சேர்ந்து வருடம் முழுவதும் தேங்கி நிற்கிறது. இதனை சரி செய்து தர வேண்டி ரெயில்வே, நகராட்சி, நெடுஞ்சாலை துறைகளை கண்டித்து மீன் பிடிக்கும் போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்றார். இந்த போராட்டத்தின் போது ரெயில்வே, நகராட்சி, நெடுஞ்சாலைத் துறைகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story