நாளை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்


நாளை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்
x

நாளை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்

நாகப்பட்டினம்

நாளை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அரசு செயலாளர் ஆபிரகாம் ெதரிவித்தார்.

ஆய்வு கூட்டம்

நாகையில் வாக்காளர் பட்டியல் குறித்த அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், சமூக சீர்திருத்த துறை அரசு செயலாளருமான ஆபிரகாம் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, உதவி கலெக்டர் பானோத் மருகேந்தர் லால் உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் அரசுசெயலாளர் ஆபிரகாம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாகை மாவட்டத்தில் கடந்த 9.11.2022 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் 1.1.2023-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக 4 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நாளை(வியாழக்கிழமை) இறுதிவாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 3-வது ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

நாளை இறுதி வாக்காளர் பட்டியல்

இதில் 9.11.2022 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலுக்கு பிறகு, பெறப்பட்ட பெயர் சேர்த்தலுக்கான படிவம்-6, நீக்கலுக்கான படிவம்-7, திருத்தலுக்கான படிவம்-8 ஆகியவற்றின் படி நாகை மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 651 வாக்குச்சாவடி நிலையங்கள் உள்ளன. அவற்றில் இன்றைய தேதி படி மொத்தம் 5,58,930 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2,72,650 ஆண்களும், 2,86,258 பெண்களும், மூன்றாம்வகுப்பினர் 22 பேரும் உள்ளனர். நாளை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

வீடுகளுக்கே சென்று ஆய்வு

அதனை தொடர்ந்து கீழ்வேளுர் பேரூராட்சிக்குட்பட்ட கே.கே.நகர் பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் சுருக்க திருத்தம் தொடர்பாக வரப்பெற்ற புதிய வாக்காளர் படிவங்களின் உண்மைத்தன்மை குறித்து விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கே சென்று அரசு செயலாளர் ஆய்வு செய்தார். இதில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் பகுதிகளை சேர்ந்த தாசில்தார்கள் கலந்துகொண்டனர்.


Next Story