நிதிநிறுவன அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு


நிதிநிறுவன அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு
x

அடகு வைத்த பத்திரத்தை திருப்பி தராததால் நிதிநிறுவன அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி

லால்குடி அருகே காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்னுலாப்தீன். இவரது மனைவி நூர்ஜகான் (வயது 50). இவரது மருமகன் ரபீக். இந்தநிலையில் நூர்ஜகான் கடந்த 2016-ம் ஆண்டு அங்குள்ள தனியார் நிதிநிறுவனத்தில் தனது வீட்டை அடமானம் வைத்து ரூ.3½ லட்சம் பெற்றுள்ளார். பின்னர் அந்த தொகையை ஒவ்வாரு மாதமும் செலுத்தி கடனை அடைத்துவிட்டதாக தெரிகிறது. ஆனால் சம்பந்தப்பட்ட நிதி நிறுவன ஊழியர்கள் அடமானம் வைத்த வீட்டு பத்திரத்தை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த நூர்ஜகானின் மருமகன் நேற்று மதியம் பெட்ரோல் கேனுடன் தனியார் நிதி நிறுவன அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்தார். இதுகுறித்து தகவலறிந்த லால்குடி சப்-இன்ஸ்பெக்டர் மணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நூர்ஜகான் குடும்பத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் சம்பந்தப்பட்ட நிதி நிறுவன ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இன்னும் 15 நாட்களில் அடமானம் வைத்த பத்திரத்தை திரும்பி ஒப்படைப்பதாக நிதி நிறுவனத்தினர் எழுதி கொடுத்தனர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story