மீனவர் உடல் திருப்பாலைக்குடி வந்தது


மீனவர் உடல் திருப்பாலைக்குடி வந்தது
x
தினத்தந்தி 3 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-04T00:15:33+05:30)

சவுதி அரேபியாவில் இறந்த மீனவர் உடல் திருப்பாலைக்குடி வந்தது கொண்டுவரப்பட்டது.

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம்,

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா திருப்பாலைக்குடி காந்தி நகர் கிராமத்தை சேர்ந்த காளிமுத்து (வயது45). இவர் கடந்த 20 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் மீன்பிடி தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில் காளிமுத்து கடந்த 2.1.23-ல் மாரடைப்பால் இறந்ததாக கூறப்படுகிறது.

அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை கோரி காளிமுத்து குடும்பத்தார் ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் மூலமாக சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.

அதன்அடிப்படையில் மீனவம் காப்போம் மக்கள் இயக்கத்தின் மூலமாக சொந்த ஊரான திருப்பாலைக்குடிக்கு கொண்டுவரப்பட்டு நேற்று இரவு 8 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது.

காளிமுத்துக்கு பூமாதேவி என்ற மனைவியும், காளிமுகிதா,, காளிசுதர்சனா, காளிசுதர்சினி என 3 மகள்களும், காளிசுதர்சன் என்ற மகனும் உள்ளனர்.

காளிமுத்துவின் இறப்பால் வருமானம் இன்றி வறுமையில் வாடும் அவரது குடும்பத்திற்கு அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story