மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13 ஆயிரத்து 839 கனஅடியாக குறைந்தது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13 ஆயிரத்து 839 கனஅடியாக குறைந்தது.
மேட்டூர்:
கர்நாடக மாநில அணைகளில் இருந்து கடந்த வாரம் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதன் எதிரொலியாக அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. அதன்படி நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 18,052 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது.
இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 13 ஆயிரத்து 839 கனடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து பாசன தேவைக்காக வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நீர்வரத்தானது வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடிக்கும் கீழ் குறையுமானால் அணை நீர்மட்டம் மீண்டும் குறைய தொடங்கும்.