பூ வியாபாரி சரமாரி வெட்டிக்கொலை


பூ வியாபாரி சரமாரி வெட்டிக்கொலை
x

பட்டுக்கோட்டையில், முன் விரோதம் காரணமாக பூ வியாபாரி சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை,

பட்டுக்கோட்டையில், முன் விரோதம் காரணமாக பூ வியாபாரி சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பூ வியாபாரி

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர் காத்தாடி ராஜா(வயது 52). இவர், பட்டு்க்கோட்டை பெரிய தெரு பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கி அருகில் பூக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு மனைவியும், மகளும் உள்ளனர். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக்(37), வீரமணி(27) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

வெட்டிக்கொலை

இந்த நிலையில் நேற்று காலை பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே காத்தாடி ராஜா நின்று கொண்டு இருந்தார். காலை நேரம் என்பதால் ஏராளமான பொதுமக்களும் அங்கு இருந்தனர்.அப்போது அங்கு வந்த கார்த்திக், வீரமணி ஆகிய இருவரும் காத்தாடி ராஜாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் முற்றியதில் இருவரும் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் காத்தாடி ராஜாவை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். இந்த கொலையை நேரில் பார்த்ததும் அங்கு இருந்த பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.

கொலையாளிகள் 2 பேர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கொலை செய்யப்பட்ட காத்தாடி ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காத்தாடி ராஜாவை கொலை செய்ததாக கார்த்திக், வீரமணி ஆகிய இருவரையும் கைது செய்தனர். நகரின் முக்கிய பகுதியில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் காலை நேரத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் பட்டுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story