தேவர்சோலை அருகே காட்டு யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவி-வனத்துறையினர் வழங்கினர்
தேவர்சோலை அருகே காட்டு யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவி-வனத்துறையினர் வழங்கினர்
நீலகிரி
கூடலூர்
கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட செம்பக்கொல்லி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காட்டு யானை தாக்கி பழங்குடியினத்தை சேர்ந்த குட்டன் என்பவர் உயிரிழந்தார். அப்போது வனத்துறை சார்பில் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. பின்னர் மீதம் உள்ள நிவாரணத் தொகை ரூ.4.50 லட்சம் குட்டனின் மனைவி மற்றும் 3 மகன்களிடம் தேவர்சோலை பேரூராட்சி தலைவர் வள்ளி, துணைத்தலைவர் யூனஸ் பாபு மற்றும் கவுன்சிலர்கள், ஊர் மக்கள் முன்னிலையில் கூடலூர் வனச்சரகர் ராதாகிருஷ்ணன், வனவர் சுரேஷ் ஆகியோர் வழங்கினர்.
Related Tags :
Next Story