தேங்காய்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்


தேங்காய்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
x
தினத்தந்தி 12 July 2023 6:40 PM IST (Updated: 13 July 2023 1:07 PM IST)
t-max-icont-min-icon

தேங்காய்களை கிலோ ரூ.50-க்கு கொள்முதல் செய்ய வலியுறுத்தி தேங்காய்களை உடைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்

போராட்டம்

உடுமலை பகுதியில் தென்னை சாகுபடி பிரதானமாகும். கடந்த சில மாதங்களாக தேங்காய்க்கு உரிய விலை கிடைப்பதில்லை. ஆனால் பராமரிப்பு, இடுபொருட்கள், தேங்காய் உரித்தல் உடைத்தல் என பல்வேறு பணிகளுக்கு கூலி உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். மேலும் தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயம் கோரி நீண்ட நாட்களாக கோரிக்கையும் விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் தென்னை விவசாயிகளை காப்பாற்ற கோரி தேங்காய் உடைக்கும் போராட்டம் நேற்று உடுமலையில் நடைபெற்றது. உடுமலை-பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அருண்பிரகாஷ் வரவேற்புரை ஆற்றினார். மாநிலத் தலைவர் சண்முகம் சிறப்புரை ஆற்றினார்.

கோரிக்கை

அதைத்தொடர்ந்து போராட்டத்தில் உரித்த தேங்காய் கிலோ ரூ.50-க்கும் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். கொப்பரை தேங்காய் கிலோ ரூ.140-க்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். கொப்பரைக்கு ஊக்கத்தொகை வழங்கி ஆண்டு முழுவதும் கொப்பரையை கொள்முதல் செய்ய வேண்டும். ஏக்கருக்கு ஆண்டுக்கு 290 கிலோ கொள்முதல் செய்வதை 900 கிலோ அளவிற்கு உயர்த்த வேண்டும்.

ரேஷன் கடைகள் மூலமாக தேங்காய் எண்ணெய் வினியோகம் செய்யய வேண்டும். பாமாயில் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்வதை தடை செய்ய வேண்டும். தென்னை மரங்களை நோய் தாக்குதில் இருந்து காப்பாற்ற மானிய விலையில் மருந்துகள் நுன்னூட்ட சத்துக்கள் வழங்க வேண்டும்.

சென்னையில் உள்ள தென்னை வளர்ச்சி வாரி அலுவலகத்தை திருமூர்த்தி மலையில் உள்ள தென்னை ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நிலையத்திற்கு மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

1 More update

Next Story