தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அடிக்கல் நாட்டு விழா


தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அடிக்கல் நாட்டு விழா
x
தினத்தந்தி 12 Dec 2022 12:15 AM IST (Updated: 12 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூர் அருகே தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அடிக்கல் நாட்டு விழா நடந்தது

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் ஒன்றியம் சொக்கம்பட்டி ஊராட்சியில் மாவட்ட கவுன்சிலர் கனிமொழியின் நிதியின் கீழ் 9.95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளரும், மாநில தலைமை செயற்குழு உறுப்பினருமான டாக்டர் செல்லத்துரை, அவைத்தலைவர் சுந்தர மகாலிங்கம், தி.மு.க. மாவட்ட கவுன்சிலரும், மாவட்ட துணைச் செயலாளருமான கனிமொழி, ஒன்றிய செயலாளர் சுரேஷ், கடையநல்லூர் யூனியன் துணை தலைவர் ஐவேந்திரன் தினேஷ், யூனியன் கவுன்சிலர்கள் கீதா மணிகண்டன், அருணாசல பாண்டியன், கிளைக் கழக செயலாளர் சுப்பிரமணியன், சொக்கம்பட்டி பஞ்சாயத்து தலைவர் பச்சைமால், வார்டு உறுப்பினர் ராஜா மறவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story