6-9 ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 21-ல் முழு ஆண்டு தேர்வு தொடக்கம்..!


6-9 ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 21-ல் முழு ஆண்டு தேர்வு தொடக்கம்..!
x

தமிழகத்தில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 21-ம் தேதி முழு ஆண்டு தேர்வு தொடங்குகிறது.

சென்னை,

தமிழகத்தில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 21-ம் தேதி முழு ஆண்டு தேர்வு தொடங்குகிறது. ஏப்.21-ம் தேதி தொடங்கி ஏப்.28-ம் தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

6-9 ஆம் வகுப்புக்கு 21-ம் தேதி (வெள்ளி) தமிழ் தேர்வு, 24-ம் தேதி ஆங்கிலம் தேர்வு, 25-ம் தேதி கணிதம் தேர்வு, 26-ம் தேதி அறிவியல் தேர்வு நடக்கிறது. 27-ம் தேதி உடற்கல்வி தேர்வு, 28-ம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது.

6-ம் வகுப்பிற்கு காலை 10 மணி முதல் 12 மணி வரையும், 7-ம் வகுப்பிற்கு மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.

8-ம் வகுப்பிற்கு காலை 9.30 மணி முதல் 12 மணி வரையிம், 9-ம் வகுப்பிற்கு மதியம் 2 மணி முதல் 4.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.


Next Story