மணல் கடத்தல் குறித்து தகவல் தெரிவித்தவர் வீட்டை சூறையாடிய கும்பல்


மணல் கடத்தல் குறித்து தகவல் தெரிவித்தவர் வீட்டை சூறையாடிய கும்பல்
x

ஜோலார்பேட்டை அருகே மணல் கடத்தல் குறித்து தகவல் தெரிவித்தவர் வீட்டை கும்பல் சூறையாடியது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டையை அடுத்த கூத்தாண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் வெங்கடேசன் (வயது 37), கூலித்தொழிலாளி.

அதே பகுதியை சேர்ந்த ஒருவர் ஆற்றில் இருந்து பொக்லைன் எந்திரம் மூலம் லாரியில் மணல் கடத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெங்கடேசன் ஜோலார்பேட்டை போலிசாருக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மணல் கடத்தலில் ஈடுபட்டவர் மற்றும் வாணியம்பாடி அருகே உள்ள தெக்குப்பட்டு பகுதியை சேர்ந்தவர்கள் 3 பேர் கொண்ட கும்பல் நேற்று இரவு வெங்கடேசனின் வீட்டிற்கு சென்று நீ தான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தாயா? என கேட்டு அவரது வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் கதவுகள் மற்றும் மினிவேன் முன்பக்க கண்ணாடி ஆகியவற்றை உடைத்து தாக்கி உள்ளனர்.

இதுகுறித்து வெங்கடேசன் ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணல் கடத்துவதாக தகவல் தெரிவித்ததால் நள்ளிரவில் வீட்டை சூறையாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story