கார் மோதி பெண் சாவு
திருச்செங்கோடு அருகே கார் மோதி பெண் பலியானார்.
நாமக்கல்
எலச்சிபாளையம்
திருச்செங்கோடு அருகே உள்ள மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வி (வயது 27). இவர் மண்டகாபாளையத்தில் உள்ள ஆயத்தஆடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று காலை ஸ்கூட்டரில் குமரமங்கலம் பிரிவு சாலை அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார், எதிர்பாராத விதமாக இவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது கணவர் ராமு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு 7 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
Related Tags :
Next Story