ரெயிலில் இருந்து தவறி விழுந்து சிறுமி காயம்


ரெயிலில் இருந்து தவறி விழுந்து சிறுமி காயம்
x

வள்ளியூரில் ரெயிலில் இருந்து தவறி விழுந்து சிறுமி காயம் அடைந்தாள்.

திருநெல்வேலி

வள்ளியூர்:

கோவையில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் பயணிகள் ெரயில் நேற்று இரவு 7 மணிக்கு வள்ளியூர் வந்தடைந்தது. அந்த ெரயிலில் பணகுடியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் தனது மகள் 8 வயது சிறுமி அகிலாஸ்ரீ மற்றும் குடும்பத்தினருடன் வள்ளியூருக்கு வந்தார். வள்ளியூர் ெரயில் நிலையத்தில் வந்து ெரயில் நிற்கும் முன்பாக அவசர வழி ஜன்னல் வழியாக அகிலாஸ்ரீ எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் பிளாட்பாரத்திற்கும், ெரயில்வே தண்டவாளத்திற்கும் இடையே விழுந்த சிறுமி காலில் சிறு காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ெரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story