தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த சிறுமி பலி


தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த சிறுமி பலி
x

ஆனைமலை அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து பலியானார்.

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலையை அடுத்த ஒடையகுளம் முதலியார் வீதியை சேர்ந்தவர் தனசேகரன்(வயது 35). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரிதா (30). இவர்களுக்கு தன்ஷிகா (2½) என்ற ஒரு மகள் உள்ளாள். இந்தநிலையில் நேற்று தன்ஷிகா வீட்டு முன்பு விளையாடி கொண்டிருந்தாள். அப்போது சரிதா வீட்டுக்குள் இருந்தார். தொடர்ந்து விளையாடிய சிறுமி பராமரிப்பு பணிக்காக திறந்து வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் தொட்டிக்குள் எதிர்பாராதவிதமாக விழுந்தாள்.

சிறுமியை காணவில்லை என்று சரிதா அங்கும், இங்கும் தேடினார். அப்போது தொட்டிக்குள் விழுந்த தன்ஷிகாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே சரிதா தனது மகளை தூக்கிக்கொண்டு, வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அம்பராம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தன்ஷிகா பரிதாபமாக இறந்தாள். இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story