பெண் தீக்குளிக்க முயற்சி


பெண் தீக்குளிக்க முயற்சி
x

திட்டக்குடியில் பெண் தீக்குளிக்க முயறன்றாா்.

கடலூர்

ராமநத்தம்:

ஆவினங்குடி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல் மனைவி வள்ளி(வயது 60). இவர், அதே ஊரை சேர்ந்த ஒருவருக்கு ரூ.40 ஆயிரம் கடனாக கொடுத்துள்ளார். இதில் ரூ.23 ஆயிரத்தை மட்டும் அவர் திருப்பி கொடுத்துள்ளார். மீதமுள்ள பணத்தை கொடுக்காமல் காலம்தாழ்த்தி வந்தார். பணத்தை கேட்ட வள்ளிக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ஆவினங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த வள்ளி, திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தன் மீது மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த போலீசார் விரைந்து வந்து, அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் போலீசார், இது தொடர்பாக விசாரித்து மீதமுள்ள பணத்தை பெற்றுத்தருவதாக கூறினர். இதையடுத்து வள்ளி அங்கிருந்து சென்று விட்டார்.

1 More update

Next Story