சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை


சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை
x

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் போக்சோவில் கைது செய்யப்பட்டான்

கோயம்புத்தூர்

துடியலூர்

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் போக்சோவில் கைது செய்யப்பட்டான்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சிறுவனுடன் பழக்கம்

கோவையை அடுத்த கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, அங்குள்ள கடையில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் என்ற சமூக வலைத்தளம் மூலமாக அப்பநாய்க்கன்பாளையம் பகுதி யை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் 2 பேரும் தங்களது செல்போன் எண்க ளை பரிமாறிக் கொண்டு தொடர்ந்து பேசி வந்தனர். சம்பவத் தன்று வேலைக்கு சென்ற சிறுமி மாலையில் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை.

போலீசில் ஒப்படைப்பு

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதைய டுத்து போலீசார், சிறுமியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது அவர் பழனியில் சிறுவனுடன் இருப்ப தாக கூறினார். உடனே போலீசாரின் அறிவுரையின் பேரில் சிறுமியிடம் அவரு டைய பெற்றோர் பேசி, இங்கே வந்தால் பேசிக் கொள்ளலாம் என்று கூறி அழைத்தனர்.

அதை ஏற்று வந்ததும் அவர்கள் 2 பேரையும் துடியலூர் போலீசில் சிறுமியின் பெற்றோர் ஒப்படைத்தனர்.

பாலியல் தொல்லை

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழனிக்கு சிறுவன் கடத்திச் சென்று உள்ளார். அங்கு ஒரு லாட்ஜில் அறை எடுத்த அந்த சிறுவன், சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.

பின்னர் அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

1 More update

Next Story