சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்கள் கைது


சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த  2 வாலிபர்கள் கைது
x

ஜெயங்கொண்டம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை தூக்கி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்

ஜெயங்கொண்டம்

பாலியல் பலாத்காரம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள நாயகனைப்பிரியாள் கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தரூபன் மகன் கமரன்(வயது 22). கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் சின்னராஜா மகன் மன்மதராஜா(22). கூலி தொழிலாளி. இவர்கள் இருவரும் அதே பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டுக்கு பின்புறம் ஒதுக்குப்புறமான இடத்திற்கு வலுக்கட்டாயமாக தூக்கி சென்று கமரனும், மன்மதராஜாவும் கூட்டாகவும், தனித்தனியாகவும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கைது

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிந்து கமரன், மன்மதராஜா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story