மாணவியின் வாயில் துணியை திணித்து பலாத்காரம்


மாணவியின் வாயில் துணியை திணித்து பலாத்காரம்
x
தினத்தந்தி 24 April 2023 6:45 PM GMT (Updated: 24 April 2023 6:47 PM GMT)

திருக்கோவிலூர் அருகே மாணவியின் வாயில் துணியை திணித்து பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

தூக்கிச்சென்ற வாலிபர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் எறையூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் சம்பவத்தன்று பள்ளி முடிந்ததும், பஸ்சில் வீட்டுக்கு புறப்பட்டார். காட்டுச்செல்லூர் பஸ் நிறுத்தம் வந்ததும், பஸ்சில் இருந்து இறங்கிய மாணவி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ராக்கி என்கிற அய்யனார் (வயது 29), மாணவியை வழிமறித்துள்ளார். பின்னர் திடீரென மாணவியின் வாயில் துணியை வைத்து திணித்து அவரை அதே பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு தூக்கிச் சென்றார்.

மாணவிக்கு மிரட்டல்

அங்கு அவர், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் நடந்த சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் உன்னையும், உனது குடும்பத்தினரையும் வெட்டி கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் தெரிகிறது.

இதுபற்றி மாணவி தனது தாயிடம் கூறி, கதறி அழுதுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய், திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராதிகா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராக்கி என்கிற அய்யனாரை கைது செய்தார்.


Next Story