பாட்டியுடன் வீட்டிற்குள் முடங்கி கிடந்த சிறுமி மீட்பு


பாட்டியுடன் வீட்டிற்குள் முடங்கி கிடந்த சிறுமி மீட்பு
x

பாட்டியுடன் வீட்டிற்குள் முடங்கி கிடந்த சிறுமி மீட்பு

திருவாரூர்

கொரடாச்சேரி ஒன்றியம் பவித்திரமாணிக்கத்தை சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மனைவி சுசீலா. இவர்களுக்கு 12 வயதில் தரண்யா என்ற மகள் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக சரவணகுமார் பிரிந்து சென்று விட்டார். தொடர்ந்து சுசீலாவின் பராமரிப்பில் தரணியா இருந்துள்ளார். கடந்த ஆண்டு சுசீலா பாம்பு கடித்து இறந்தார். இதையடுத்து தாய்மாமன் ரவிச்சந்திரன் பராமரிப்பில் சிறுமி இருந்துள்ளார். ரவிச்சந்திரன் கொரோனாவால் இறந்தார். இதனால் ஆதரவற்ற நிலையில் இருந்த தரண்யா, தனது பாட்டி சீதாலட்சுமியுடன் பவித்திரமாணிக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்துள்ளார். பாட்டியுடன் தரண்யா வீட்டுக்குள்ளேயே முடங்கி, பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். தகவல் அறிந்த கொரடாச்சேரி வட்டாரக்கல்வி அலுவலர்கள் விமலா, சுமதி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிருந்தாதேவி, பவித்திரமாணிக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி, இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்கும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமேகலை உள்ளிட்ட குழுவினர் பாட்டியுடன் வீட்டில் இருந்த சிறுமியை மீட்டு, அவருக்கு மனநல ஆலோசனை வழங்கினர். தொடர்ந்து தரண்யாவை திருவாரூரில் உள்ள பாத்திமா ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்து அங்குள்ள பள்ளியிலேயே படிப்பை தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தகவல் அறிந்த பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு வந்து சிறுமிக்கு ஆறுதல் கூறினார்.


Related Tags :
Next Story