மாடிப்படி கம்பியில் சறுக்கி விளையாடிய சிறுமி உயிரிழப்பு
மாடிப்படி கம்பியில் சறுக்கி விளையாடிய சிறுமி உயிரிழந்தார். கொடியில் காயப்போட்டு இருந்த துணி கழுத்தை இறுக்கியதால் இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது.
மாடிப்படி கம்பியில் சறுக்கி விளையாடிய சிறுமி உயிரிழந்தார். கொடியில் காயப்போட்டு இருந்த துணி கழுத்தை இறுக்கியதால் இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது.
படிக்கட்டுகளில் விளையாட்டு
விருதுநகர் அல்லம்பட்டியில், மாத்திநாயக்கம்பட்டி ரோடு பகுதியை சேர்ந்தவர் மரிய அருள்பாசில் (வயது43). இவருடைய மகள் பெனிட்டா (13).
8-ம் வகுப்பு படித்து வந்த இவள், வீட்டு மாடி படிக்கட்டு ைகப்பிடி கம்பியில் சறுக்கி விளையாடினாள்.
சம்பவத்தன்று உடல்நிலை பாதிப்பால் பள்ளிக்கு செல்லாமல் இருந்த பெனிட்டா, மாடி படிக்கட்டு கம்பியில் சறுக்கி விளையாடி உள்ளாள்.
சிறுமி சாவு
அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு கொடியில் காயப்போட்டு இருந்த துணி அந்த சிறுமியின் கழுத்தை இறுக்கி தொங்கிக் கொண்டிருந்தாள்.
சற்று நேரம் கழித்து மரிய அருள் பாசில், காய போட்டிருந்த துணிகளை எடுக்க மாடிக்கு சென்றார்.
அப்போது பெனிட்டாவின் கழுத்தில் துணி இறுக்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவளை மீட்டு உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் பெனிட்டாவை பரிசோதித்த டாக்டர்கள் அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபரீத சம்பவம் குறித்து விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.